ADDED : ஏப் 16, 2024 10:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் புதுக்குப்பம் கற்பக விநாயகர், முத்து மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
அதையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், முதல்கால பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 6:00 மணிக்கு மேல் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
கடம் புறப்பாடு நிகழ்வுடன் காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், ரத்தின சபாபதி சிவாச்சாரியார் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடத்தி வைத்தார்.
ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சாமி வீதியுலா நடந்தது.

