/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒருவழி பாதையில் விதிமீறல்: நேதாஜி சாலையில் 'டிராபிக் ஜாம்'
/
ஒருவழி பாதையில் விதிமீறல்: நேதாஜி சாலையில் 'டிராபிக் ஜாம்'
ஒருவழி பாதையில் விதிமீறல்: நேதாஜி சாலையில் 'டிராபிக் ஜாம்'
ஒருவழி பாதையில் விதிமீறல்: நேதாஜி சாலையில் 'டிராபிக் ஜாம்'
ADDED : மே 23, 2024 05:10 AM
கடலுார் : கடலுாரில் ஒருவழிப் பாதையான நேதாஜி சாலையில் விதிமீறி வாகனங்கள் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலுார் நேதாஜி சாலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அந்த சாலையில், கடலுார் மார்க்கமிருந்து கார், ஆட்டோ மற்றும் கன ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஸ், கார் மற்றும் கனரக வாகங்கள் செம்மண்டலம் வழியாக செல்ல வேண்டும். ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள், பழைய கலெக்டர் அலுவலகம் வழியாக, மஞ்சக்குப்பத்தை அடைய வேண்டும். ஆனால், கார், ஆட்டோ போன்றவை துரிதமாக செல்ல சப் ஜெயில் சாலை வழியாக தெற்கு கவரத்தெரு சந்திப்பில் நேதாஜி சாலையில் சென்று இணைகின்றனர்.
இந்த சாலையில் ஏற்கனவே கார், பஸ் என செல்வதால் குறுக்கு வழியில் வரும் கார், ஆட்டோக்களால் திரும்பும் இடத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கார், ஆட்டோவில் பயணிப்பவர்கள் புல்லுக்கடை சந்து வழியாக நேதாஜி சாலையில் சென்று இணையும் வகையில், போலீசார் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அப்போதுதான் டிராபிக் ஜாம் இல்லாமல் வாகனங்கள் செல்ல முடியும்.

