/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூத் சிலிப் விநியோகத்தில் குளறுபடி வாக்காளர்கள் அலைக்கழிப்பு
/
பூத் சிலிப் விநியோகத்தில் குளறுபடி வாக்காளர்கள் அலைக்கழிப்பு
பூத் சிலிப் விநியோகத்தில் குளறுபடி வாக்காளர்கள் அலைக்கழிப்பு
பூத் சிலிப் விநியோகத்தில் குளறுபடி வாக்காளர்கள் அலைக்கழிப்பு
ADDED : ஏப் 20, 2024 05:22 AM

கடலுார், : கடலுார் மாவட்டத்தில் பூத் சிலிப் விநியோகம் செய்ததில் குளறுபடி ஏற்பட்டதால் வாக்காளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர்.
கடலுார் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல் நேற்று நடந்தது. 9 சட்டசபை தொகுதிக்குட்பட்ட 2,302 ஓட்டுச்சாவடி மையங்கள் வாரியாக 10,51,141 ஆண் வாக்காளர்கள், 10,84,621 பெண் வாக்காளர்கள், 286 மூன்றாம் பாலினத்தவர்கள் என, மொத்தம் 21,36,048 பேருக்கு பூத் சிலிப் வீடு தேடிச் சென்று வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, அந்தந்த வாக்காளர்களின் வீடுகளை தேடிச் சென்று பூத் சிலிப் வழங்கினர். ஆனால், கடலுார், சிதம்பரம் உட்பட பல பகுதிகளில் பூத் சிலிப் பல வாக்காளர்களுக்கு முறையாக வழங்கவில்லை. இதனால், வாக்காளர்கள் தங்களுக்கு எந்த ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டு உள்ளது என, தெரியாமல் ஒவ்வொரு மையத்தையும் தேடிச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதற்கிடையே, கடலுார், மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், 82; என்பவர் வழக்கம் போல் ஓட்டளிக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடி மையத்திற்கு ஓட்டளிக்க வந்தார்.
அங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் வீடு திரும்பினார்.

