/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஓட்டளிப்பு
/
தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஓட்டளிப்பு
ADDED : ஏப் 09, 2024 05:34 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் நேற்று தபால் ஓட்டு போட்டனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, விருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு 1,063 பேர் வாக்குச்சாவடி பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தபால் ஓட்டு போடுவதற்கு, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, தபால் ஓட்டு பெட்டிகள் கொண்டுவரப்பட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஓட்டு பெட்டி திறந்து மீண்டும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடி பணியாளர்கள் தபால் ஓட்டு போட்டனர். அதன்பின், சீல்வைக்கப்பட்ட ஓட்டுபெட்டி மீண்டும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது.
அதில், கடலுார் லோக்சபா தொகுதிக்கு 584 தபால் ஓட்டுகளும், சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு 277 தபால் ஓட்டுகளும் போடப்பட்டிருந்தன. பின்னர் தபால் ஓட்டுகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

