/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கை 'புஸ்'
/
விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கை 'புஸ்'
ADDED : ஜூலை 17, 2024 12:49 AM
கடலுார் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பேசும் தலைவர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை பேசிச் செல்வது வழக்கம்.
ஆனால், ஆட்சி அதிகாரம் கிடைத்ததும், தனி மாவட்ட கோரிக்கை கிடப்பில் போடப்படுவது வாடிக்கையாகி விட்டது.
ஆனால், தேர்தலுக்கு முன் சுற்றுப்பயணம் வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், விருத்தாசலம் மக்களிடம் மனுக்களை பெற்றபோது, ஆட்சியமைத்த 100 நாட்களில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இல்லாவிட்டால், தலைமைச் செயலகத்தில் என்னை நேரில் சந்தித்து முறையிடலாம் என தெரிவித்தார்.
அதில், பெரும்பாலானோர் தனி மாவட்ட கோரிக்கையை முன் வைத்திருந்தனர்.
தற்போது, தி.மு.க., ஆட்சியமைத்து மூன்றரை ஆண்டுகளான நிலையில், விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
சிட்டிங் காங்., எம்.எல்.ஏ., சார்பில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் விடுத்த 10 கோரிக்கைகளில் நான்கு நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோல், அவரின் முதல் கோரிக்கையான விருத்தாசலம் தனி மாவட்ட கோரிக்கை நிறைவேறுமா என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.