/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிதியின்றி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல் புலம்பும் நீர்வளத்துறை அதிகாரிகள்
/
நிதியின்றி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல் புலம்பும் நீர்வளத்துறை அதிகாரிகள்
நிதியின்றி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல் புலம்பும் நீர்வளத்துறை அதிகாரிகள்
நிதியின்றி ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல் புலம்பும் நீர்வளத்துறை அதிகாரிகள்
ADDED : ஜூலை 03, 2024 02:57 AM
தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள் பல பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டு, விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது.
இதனால் மழை காலங்களில், தண்ணீர் வடிய வழியின்றி, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடுகிறது. இதனால் மழை காலங்களில் பொதுமக்கள் பாதிப்பு தொடர்கிறது.
மேலும், கிராம பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக, கால்நடைகளுக்கு சரியான மேய்ச்சல் இடமின்றி கால்நடைகள் வைத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால், நீர் நிலை ஆதாரங்களான ஏரி, வாய்க்கால், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற தமிழக அரசுக்கு, ஐகோர்ட் உத்திரவிட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொள்ளும், நீர்வளத்துறையினரிடம் அதற்கான நிதியை அரசு முறையாக ஒதுக்குவதில்லை என கூறப்படுகிறது.
ஆனால், உயர் அதிகாரிகள், கீழ்மட்டத்தில் உள்ள நீர்வளத்துறை அதிகாரிகளை இப்பணியை விரைந்து செய்ய கூறுவதுடன், ஆக்கிரமிப்பு செய்துள்ளவரிடமே பணம் வசூல் செய்து செலவு செய்யும்படியும் அதிகாரிகள் தரப்பு நிர்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றி துார் வாரும் பணியை மேற்கொள்ள ஜே.சி.பி., புல்டோசர், லாரி ,டிராக்டர் உள்ளிட்ட வாகன செலவு மற்றும் பணியாளர்கள் செலவுகளை எப்படி சமாளிப்பது என, கீழ்மட்ட அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
இதனாலேயே கடலுார் மாவட்டத்தில் பல ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டடம் கட்டுமான பணி மற்றும் சாலை போடும் பணிக்கு முன்பே நிதி ஒதுக்கீடு செய்து பணி செய்ய சொல்லும் அரசு அதிகாரிகள், முக்கிய பணியான நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வார நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.