
கடலுார்: கடலுார் ஒயாசிஸ் தொண்டு நிறுவனம் ப்ளோரா தவராஜ் இல்ல திருமண விழா வள்ளி விலாஸ் மகாலில் நடந்தது.
கடலுார் ஒயாசிஸ் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் லெனின் பிரபா- ஒயாசிஸ் நிறுவன சேர்மன் எப்சிபா திருமணம் தேவாலயத்தில் நடந்தது. அதைத்தொடர்ந்து வள்ளி விலாஸ் மகாலில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. நிறுவனர் ப்ளோரா தவராஜ், ஆரோக்கியதாஸ், எழில் ராணி ஆரோக்கியதாஸ் ஆகியோர் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகர், ஆர்.டி.ஓ., அபிநயா, சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., தாசில்தார் பலராமன், துணை மேயர் தாமரைச்செல்வன், தொழிலதிபர் அனிதா ரமேஷ், வழக்கறிஞர் சிவமணி, அருள் தந்தைகள், ஆரோக்கியநாதன், சகாயராஜ், ஆரோக்கிய ஆனந்தராஜ், டி.ஓ.எஸ்., பள்ளி மேலாளர் அருள்நாதன், ஏ.எல்.சி., பீட்டர் பால்தாமஸ், தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் மற்றும் அனைத்து சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.