மக்கள் விரும்பும் திட்டத்தை தே.மு.தி.க., வரவேற்கும் பிரேமலதா எம்.எல்.ஏ., பேச்சு
மக்கள் விரும்பும் திட்டத்தை தே.மு.தி.க., வரவேற்கும் பிரேமலதா எம்.எல்.ஏ., பேச்சு
ADDED : ஆக 25, 2026 08:42 PM
விருத்தாசலம்: மக்கள் விரும்பும் எந்த திட்டத்தையும் தே.மு.தி.க., வரேவேற்கும் என பிரேமலதா எம்.எல்.ஏ., பேசினார்.
விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் பிரேமலதா எம்.எல்.ஏ., இலவச கணினி, தையல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது;
விஜயகாந்த் பிறந்த நாள் விழாவிற்க முதல்வர், எதிர்கட்சி தலைவர், தி.மு.க., தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், வாழ்த்து தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.
பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில், விளைநிலங்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகள் அதிகம் பாதிக்கபடுவதால், மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதனால்தான் முதல்வர் விஜய் அந்த மக்களிடம் நேரில் சென்று ஆதரவு தெரிவிப்பேன் என தேர்தலுக்கு முன் கூறினார். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளார்.
ஆனால், எதிர்கட்சி தி.மு.க., பெரும் நிதியை ஒதுக்கீடு செய்து 25 சதவீத விமான நிலைய பணி நடந்து வருகிறது. இது மத்திய அரசின் திட்டம். நாம் என்ன சொல்கிறோம் என்றால், மக்கள் விரும்பினால் தான் அந்த திட்டம் வெற்றி பெறும். மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது கேள்விக்குறிதான்.
மக்கள் விரும்பும் எந்த திட்டத்தையும் தே.மு.தி.க., வரவேற்கும். ஆனால், எதிர்க்கும் திட்டம் என்றால் அதனை பரிசீலனை செய்துதான் சொல்ல முடியும்.
அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்கள் குறித்து பேசியது எனக்கு தெரியாது. அதற்கு நீங்கள் த.வெ.க., வினரிடம் தான் கேள்வி கேட்க வேண்டும்.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைவதாக சட்டசடையில் பேசினேன். அதனால்தான் 13 லட்சம் சணல் சாக்குகள் கொல்கத்தாவில் இருந்து விருத்தாசலம் வரவழைக்கப்பட்டு, நெல் மூட்டைகள் பாதுகாக்கும் கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காஸ் சிலிண்டர் கொடுங்கள் என்று பெண்கள் யாரும் கேட்கவில்லை. ஓட்டு வாங்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஒரு வாக்குறுதியை கொடுத்தால் அதனை நிறைவேற்ற வேண்டும். பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்தால், மக்கள் அதற்கான பதிலை அடுத்த தேர்தலில் கொடுப்பர் என்றார்.
