ADDED : ஆக 25, 2026 09:42 PM
கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமி்ழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுமதி தலைமை தாங்கினார். ஜீவா, பாலசுந்தரி, அமுதா முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா வரவேற்றார். மாவட்ட அமைப்பு குழு தலைவர் ரங்கசாமி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் விளக்க உரையாற்றினார். நிர்வாகிகள் வையாபுரி, தர்மலிங்கம், தனசு வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சத்துணவு மையங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய நியமனங்களை காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட இணை செயலாளர் விஜயா நன்றி கூறினார்.
