/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டி முடிக்கப்பட்ட சித்த மருத்துவ பிரிவு கட்டடம் திறப்போது எப்போது?

ADDED : ஏப் 22, 2024 06:20 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் கட்டப்பட்டுள்ள சித்தமருத்துவ பிரிவு கட்டடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் தினமும் 300 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளி நோயாளிகயாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.மேலும் சித்த மருத்துவுபிரிவு,பல்மருத்துவம்,கண் மருத்துவம் மற்றும் 24 மணி நேர பிரசவம் பார்க்கும் வசதி உள்ளது.
இந்த ஆரம்ப சுகாதாரநிலையத்தில் இருந்த பெரிய கட்டடம் முழுமையாக பழுதடைந்தது.இதனால் அனைத்து மருத்துவ பிரிவுகளும் பிரசவம் பார்க்கும் பகுதியில் வருகிறது.
இதனால் சித்தமருத்துவபிரிவிற்கு கடந்த 6 மாத்திற்கு முன் ரூ.22 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. தற்போது லோக்சபா தேர்தல் விதி அமுலில் உள்ளதால்,அரசியல் பிரமுகர்கள் வந்து கட்டடத்தை திறக்க முடியாததால் கட்டடம் கட்டும் பணி முடிந்தும் திறக்காமல் உள்ளனர்.
ஆகையால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை கட்டடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.