/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கணவன் இறந்த துக்கம் நெஞ்சு வலியால் மனைவி சாவு
/
கணவன் இறந்த துக்கம் நெஞ்சு வலியால் மனைவி சாவு
ADDED : மார் 14, 2025 05:31 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கணவன் இறந்த துக்கத்தில், அழுத மனைவி நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சிதம்பரம் அடுத்த வல்லத்துரையை சேர்ந்தவர் ராசப்பன், 70; டீக்கடை நடத்தி வந்தார். சில தினகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த ராசப்பன், நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதையடுத்து, அவரது மனைவி மங்கலட்சுமி, கணவர் இறப்பில், அழுதபோது நேற்று மதியம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.