/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாழநல்லூர் தார் சாலை அகலப்படுத்தப்படுமா
/
தாழநல்லூர் தார் சாலை அகலப்படுத்தப்படுமா
ADDED : ஏப் 30, 2024 05:46 AM
பெண்ணாடம்: பெண்ணாடத்திலிருந்து தாழநல்லூர் செல்லும் தார் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண்ணாடம் - தாழநல்லூர் தார் சாலையைப் பயன்படுத்தி பஸ், லாரி, வேன் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன.
மேலும், இச்சாலையை பயன்படுத்தி திருமலை அகரம், வடகரை, நந்திமங்கலம், கோனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு செல்கின்றனர்.
அதில், பெண்ணாடத்தில் இருந்து தாழநல்லூர் வரை சாலை குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு ஒதுங்க முடியாத நிலை உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தவறி சாலைப் பள்ளங்கள் மற்றும் விளைநிலங்களில் கவிழும் அபாயம் உள்ளது. எனவே, தாழநல்லூர் வரையிலான தார் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

