/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெ.பொன்னேரி மேம்பால ரவுண்டானாவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படுமா?
/
பெ.பொன்னேரி மேம்பால ரவுண்டானாவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படுமா?
பெ.பொன்னேரி மேம்பால ரவுண்டானாவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படுமா?
பெ.பொன்னேரி மேம்பால ரவுண்டானாவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : மே 01, 2024 07:18 AM

பெண்ணாடம், : பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால முகப்பில் உள்ள ரவுண்டானாவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - திட்டக்குடி சாலை மார்க்கத்தில், பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே கேட் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அப்போது, பெ.பொன்னேரியில் உள்ள ரயில்வே கேட் (எண் - 181) ரயில்கள் வரும்போது மூடுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதித்து வாகன ஓட்டிகள், பொது மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பை சீரமைக்க கடந்த 2010ல் ரூ. 23 கோடியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு, 2016ல் போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் ரயில்வே மேம்பாலம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், மேம்பால முகப்பு ரவுண்டாவில் வளைந்து செல்ல போதிய இடவசதியின்றி, எதிரே வரும் வாகனங்களுடன் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் பல வாகன உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
ரவுண்டானாவில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வாகன ஓட்டிகள், பொது மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கிறது.
எனவே, வாகன ஓட்டிகள், பொது மக்கள் நலன்கருதி, பெ.பொன்னேரி மேம்பால முகப்பில் உள்ள ரவுண்டானாவில் உயரிமின் கோபுர விளக்கு அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.