/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிப்படை வசதிகள் செய்து தர பாடுபடுவேன்: நெல்லிக்குப்பம் 2வது வார்டு கவுன்சிலர் உறுதி
/
அடிப்படை வசதிகள் செய்து தர பாடுபடுவேன்: நெல்லிக்குப்பம் 2வது வார்டு கவுன்சிலர் உறுதி
அடிப்படை வசதிகள் செய்து தர பாடுபடுவேன்: நெல்லிக்குப்பம் 2வது வார்டு கவுன்சிலர் உறுதி
அடிப்படை வசதிகள் செய்து தர பாடுபடுவேன்: நெல்லிக்குப்பம் 2வது வார்டு கவுன்சிலர் உறுதி
ADDED : மே 04, 2024 06:52 AM

நெல்லிக்குப்பம் : மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர பாடுபடுவதாக தி.மு.க., கவுன்சிலர் இலக்கியா கூறினார்
நெல்லிக்குப்பம் தி.மு.க.,நகர இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன். இவரது மனைவி இலக்கியா. நகராட்சி ௨வது வார்டு பெரியசோழவல்லி கவுன்சிலர். இவர் கூறியதாவது:
2 வது வார்டு மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.அப்பகுதியில் 2 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.பெரும்பாலான மக்கள் கூரை வீடுகளில் வசிக்கின்றனர்.அவர்களுக்கு தேவையான குடிநீர்,சாலை,தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்துதர தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.
கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண நமக்கு நாமே திட்டத்தில் 70 லட்சம் செலவில் தரமாக கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடக்கிறது.அந்த பகுதியில் உள்ள கலியான் குட்டை,கோவில் குட்டை,அரசமரத்து குட்டை மூன்றையும் துார்வாரி மக்கள் பயன்படுத்த நடைபாதை அமைக்க தொடர்ந்து போராடி வருகிறார். இப் பகுதி மக்கள் வசதிக்காக அதே பகுதியில் ரேஷன் கடை அமைக்க பல்வேறு முறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். அதேபோல் சமுதாய கூடம் கட்ட வேண்டுமென நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தி வருகிறேன்.
பழுதடைந்து காணப்படும் அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டுமென கலெக்டரிடம் மனு அளித்து போராடி வருகிறார்.குடிநீர் டேங்க் படிகட்டுகள் உடைந்துள்ளதால் சுத்தம் செய்ய சிரமமாக உள்ளதால் அதை சரி செய்ய நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். மாணவர்களின் வசதிக்காக நுாலகம் அமைக்க பாடுபட்டு வருகிறேன்.
எனது பதவி காலத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் அமைச்சர் கணேசன் ஆசியோடு முடித்து தர வேண்டுமென்ற குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறேன் எனக் கூறினார்.