தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


ADDED : ஜூலை 21, 2026 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 21, 2026 09:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம் : சிறுபாலையூர்–மணிக்கொல்லை செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூர்- மணிக்கொல்லை பகுதியை இணைக்கும் வகையில், இணைப்பு சாலை உள்ளது.

இந்த சாலையை பயன்படுத்தி, இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து, குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலங்களுக்கு விவசாய இடுபொருட்களை எடுத்துச் செல்ல, பெரும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வாகன ஓட்டுகள் அடிக்கடி கீழே விழுந்து, விபத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையும் உள்ளது.

எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சிறுபாலையூர் - மணிக்கொல்லை இணைப்பு சாலையை சீரமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us