ADDED : நவ 06, 2024 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம்; தொழுதுாரில் கிராம நுாலகம் மூடி கிடப்பதை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநத்தம் அடுத்த தொழுதுார் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தில் கிராம நுாலகம் கட்டப்பட்டது.
இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள் புத்தகங்கள் படித்து தங்களின் அறிவுத்திறனை மேம்படுத்தவும், நாளிதழ்கள் மூலம் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள முடியுமென கிராம மக்கள், பெற்றோர்கள் எதிர்ப்பார்த்தனர்.
ஆனால், கிராம நுாலகம் திறக்கப்படாமல் மூடி கிடப்பதால் மாணவர்கள், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். எனவே, தொழுதுாரில் மூடி கிடக்கும் கிராம நுாலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.