sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிரசவத்தின்போது பெண் சாவு: டாக்டர் மீது கணவர் புகார்

/

பிரசவத்தின்போது பெண் சாவு: டாக்டர் மீது கணவர் புகார்

பிரசவத்தின்போது பெண் சாவு: டாக்டர் மீது கணவர் புகார்

பிரசவத்தின்போது பெண் சாவு: டாக்டர் மீது கணவர் புகார்


ADDED : ஜூலை 04, 2024 03:21 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 03:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு பெண் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் மகள் சந்தியா,23; இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் தாலுகா, வேலானந்தலை சேர்ந்த லட்சுமணன்,25; என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சந்தியாவை, பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சியில் இருந்து தாய் வீடான அள்ளூர் அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி இரவு 11:00 மணிக்கு சந்தியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, சேத்தியாத்தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, நேற்று காலை 11:00 மணியளவில் ஆண் குழந்தை சந்தியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அங்கிருந்த செவிலியர்கள் தெரிவித்தனர். ஆனால், சந்தியாவிற்கு வலிப்பு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து சந்தியா மற்றும் குழந்தையை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக, மருத்தவர் மற்றும் செவியலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர், சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சேத்தியாதோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சந்தியாவிற்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பவில்லை. டாக்டர் அலட்சியத்தால் சந்தியா இறந்ததாக கூறி, டாக்டர் அரவிந்த் மீது, பெண்ணின் கணவர் லட்சுமணன் சேத்தியாத்தோப்பு போலீசில் புகார் செய்துள்ளார்.

இது குறித்து டாக்டர் அரவிந்த் கூறுகையில், பிரசவம் பார்க்கும்போது சந்தியாவிற்கு இரண்டுமுறை வலிப்பு ஏற்பட்டது. அதன் பிறகே குழந்தை பிறந்தது. சந்தியாவின் உடல்நிலை படுமோசமானதை தொடர்ந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினோம் என்றார்.

இச்சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us