ADDED : ஜூன் 03, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : ஸ்கூட்டர் மோதியதில் நடந்து சென்ற பெண் படுகாயமடைந்தார்
குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பம், வடக்கு தெருவை சேர்ந்தவர், தங்கப்பவனு மனைவி, அஞ்சம்மாள், 55. இவர் நேற்று முன்தினம், குள்ளஞ்சாவடி-ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது பின்புறமாக வேகமாக வந்த டிவிஎஸ்., ஸ்கூட்டர் ஒன்று, அஞ்சம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த அஞ்சம்மாள் புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.