/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் தீயிட்டு மர்ம மரணம்
/
கலெக்டரிடம் மனு கொடுத்த பெண் தீயிட்டு மர்ம மரணம்
ADDED : ஜூன் 26, 2024 11:24 PM

வேப்பூர்: வேப்பூரில் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வந்த பெண் தீயிட்டு மர்மமான முறையில் இறந்ததால் பரபரப்பு நிலவியது.
வேப்பூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி நீலாவதி, 29, இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது, வேப்பூர் துணை மின்நிலையம் அலுவலகம் முன் வாடகை வீட்டில் வசித்து வருகிறன்றனர்.
இந்நிலையில், நேற்று பகல் 11:00 மணியளவில் வேப்பூர் அடுத்த காட்டுமயிலுாரில் நடந்த மனுநீதி நாள் முகாமில் தங்களுக்கு பட்டா வழங்க கோரி நீலாவதி மனு வழங்கி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
பின், பகல் 3:00 மணியளவில் இருந்து நீலாவதியை காணாததால் அப்பகுதி முழுவதும் அனைவரும் தேடிய நிலையில், சீனிவாசன் வீட்டுமனை பிரிவில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, கொலையா? தற்கொலையா? என விசாரித்து வருகின்றனர்.