ADDED : மார் 09, 2025 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் கோ-ஆப்டெக்ஸ் முல்லை விற்பனை நிலையத்தில் மகளிர் தின விழா நடந்தது.
கடலுார் சரக கைத்தறி துறை உதவி இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி முதல்வர் சபினா பானு பேசினார். விழாவில், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
இங்கு, காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், அனைத்து விதமான சேலைகள் விற்பனை செய்யப்படுகிறது.