ADDED : மே 16, 2024 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே செங்கல் சூளை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கழவன்தொண்டி, பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் சங்கர், 40. கூலித்தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், பெண்ணாடம் அடுத்த சக்கரமங்கலத்தில் ஏற்கனவே திருமணமான பெண்ணுடன் தங்கி அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்தார். சங்கரு டன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த பெண் பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்த சங்கர் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார்.
கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

