ADDED : ஆக 08, 2024 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார், : குறிஞ்சிப்பாடி அருகே பைக் மீது மினி லாரி மோதி, கூலித் தொழிலாளி இறந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த கேசவநாராயணபுரம் ஆறுமுகம் மகன் பிரசாந்த், 25; விவசாயக் கூலி தொழிலாளி. இவர் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த விஜயகுமார், 40; என்பவருடன் நேற்று மாலை 6:30 மணிக்கு பைக்கில் குறிஞ்சிப்பாடிக்கு சென்றார்.
தம்பிப்பேட்டை அருகே சென்றபோது, கடலூர் நோக்கி சென்ற மினி லாரி பைக் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த விஜயகுமார் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.