ADDED : ஜூலை 21, 2026 08:05 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி, தொழிலாளி இறந்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த கலியமலை கிழக்கு தெருவை சேர்ந்த வரதராஜன் மகன் ரவிச்சந்திரன் 40; கூலித்தொழிலாளி.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் சேத்தியாத்தோப்பு சென்றார். வீராணம் ஏரிக்கரை ரோடு இரட்டை வாய்க்கால் அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றது. இதில் ரவிச்சந்திரன் துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.
தகவல் அறிந்த புத்துார் போலீசார் ரவிச்சந்திரன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து புத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
