நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகர்,39; கூலித் தொழிலாளி. திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஞானசேகரின் முகத்தில் கட்டி ஏற்பட்டது. இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
மனமுடைந்த அவர், கடந்த 28ம் தேதி நந்திமங்கலம் டாஸ்மாக் அருகே மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்கிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.