நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரியில் கூலித்தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி, கீரப்பாளையம் அடுத்த வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் சண்முகம்,70; கொத்தனாார்.
குடும்ப பிரச்னையில் வீட்டை விட்டு பிரிந்து சில மாதங்களாக புவனகிரியில் தங்கி, அப்பகுதியில் வேலை செய்து வந்தார்.
அவர் நேற்று முன்தினம் பெருமாத்துார் ஆற்றங்கரையோரம் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனிமையில் வசித்த வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.
இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.