/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 03, 2024 07:16 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் தென்கோட்டை வீதி, நகராட்சி நடுநிலை பள்ளியில் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் கமலாதேவி முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுநர் சரிதா வரவேற்றார்.இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் காந்திமதி, நசிம் ஆரா பேகம், சுதாகர், ஆசிரியர் பயிற்றுநர்கள் நாராயணசாமி, கவிதா, வரதராஜ பெருமாள், விசுவநாதன், சுரேஷ், கணக்காளர் வெங்கடேசன், இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை சிறப்பு ஆசிரியர்கள் புஷ்பலதா, அருள்மொழி, கணபதி, எழில் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
இதில், மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. சிறப்பு ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

