ADDED : ஜூன் 10, 2024 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சுப்பையா நகரில் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் உலக உணவு தினத்தையொட்டி கருத்தரங்கம் நடந்தது.
நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் பால்கி தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுப்புராயன் வரவேற்றார். துணைத் தலைவர்கள் ரவி, செல்வராஜ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் இந்திய நுகர்வோர் சம்மேளன மாநிலத் தலைவர் திருநாவுக்கரசு பேசினார்.
கடலுார் பீச்ரோடு மற்றும் அண்ணா விளையாட்டரங்கம் அருகில் சாலையோர கடைகளில் தரமற்ற முறையில் உணவுகள் தயார் செய்யப்படுவதை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
செயற்குழு உறுப்பினர் விக்டர் ஜெயராஜ் நன்றி கூறினார்.