ADDED : செப் 18, 2024 05:25 AM

நெய்வேலி : என்.எல்.சி.,யில் தூய்மையே சேவை மற்றும் வெகுஜன தூய்மை இயக்கச் சிறப்பு பிரச்சாரம் 4.0 ஆகியவற்றின் முன்னோட்டமாக, 2024 ம் ஆண்டிற்கான உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது.
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும், ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்குமான உலகளாவிய முயற்சியை ஆதரிக்கும் வகையில், என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமையில் இயக்குநர்கள் சமீர்ஸ் வரூப், வெங்கடாசலம், விஜிலென்ஸ் துறையின் முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் உள்ளிட்டோர் சைக்கிளில் அலுவலகம் வந்தனர்.
விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்து என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதில் மக்கள் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும். என்.எல்.சி., தலைமையானது, கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் முக்கியத்துவம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளைத் தேர்ந்தெடுப்பதையும் முன்னிலைப்படுத்த முயற்சிகள் எடுக்கும். சூரியஒளி மற்றும் காற்றாலை எரிசக்தி திட்டங்கள், காடுகளை வளர்த்து வளங்களை பாதுகாக்கும் கொள்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான என்.எல்.சி.,யின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த முயற்சி காட்டுவதாக உள்ளது என்றார்.

