ADDED : மார் 24, 2024 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் உலக காசநோய் தின உறுதிமொழியேற்பு, கையெழுத்து இயக்கம், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட காசநோய் மைய டாக்டர் முகமது ஆரீப் வரவேற்றார்.
நிலைய மருத்துவ அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், காசநோயால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு, ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்போது, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

