/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஆக 15, 2024 05:16 AM
திட்டக்குடி: தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர், அக்டோபரில் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க, https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ஒரு லட்சம், 2ம் பரிசாக ரூ. 75ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50ஆயிரம் வழங்கப்படும்.
குழுப்போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக தலா ரூ. 75ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 25ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நான்காம் இடம் பிடிப்போருக்கும் மூன்றாம் பரிசுக்கு இணையாக பரிசு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'முதல்வர் கோப்பை போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் பெற முடியும். 12வயது முதல் 19 வரையிலான பள்ளி மாணவ, மாணவியர்கள், 17வயது முதல் 25 வரை உள்ள கல்லுாரி மாணவர்கள், 15வயது முதல் 35 வரையிலான பொதுப்பிரிவினருக்கென போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே, விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் பதிவு செய்யலாம். விண்ணப்பங்களை தாங்களாகவோ அல்லது தங்கள் பள்ளி, கல்லுாரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரையில், 95140 00777 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
என கலெக்டர் தெரிவித்துள்ளார்.