ADDED : ஜூலை 01, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மதுபோதையில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் திருநாவுக்கரசு மகன் மணிகண்டன், 23; இவர், கடந்த இரு தினங்களுக்கு முன், மதுபோதையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணிடம் அத்துமீற முயன்றார். தட்டிக்கேட்ட அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து இளம்பெண் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்தனர்.
