ADDED : ஜூலை 01, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: அரசு பஸ் மோதி காயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 74; சமீபத்தில், பாலக்கரை ஆட்டோ ஸ்டாண்ட வழியாக நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற அரசு பஸ் மோதி, படுகாயமடைந்தார். சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
