குடி போதையில் விவசாயியை தாக்கிய தி.மு.க., ஆதரவாளர் கைது
குடி போதையில் விவசாயியை தாக்கிய தி.மு.க., ஆதரவாளர் கைது
ADDED : ஜூலை 01, 2026 07:52 PM
காட்டுமன்னார்கோவில்: விவசாயியை தாக்கிய தி.மு.க., ஆதரவாளரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த மா.அரசூரை சேர்ந்த கலியபெருமாள் மகன் ராஜவேல் 52; விவசாயி. அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துக்குமரன் 42; தி.மு.க., ஆதரவாளர்.
நேற்று முன்தினம் ராஜவேல், நிலத்திற்கு சென்று வீட்டுக்கு நடந்து சென்றார். மாரியம்மன்கோவில் அருகே சென்ற போது, எதிரில் குடி போதையில் வந்த முத்துகுமரன், ராஜவேலை வழிமறித்தார். அப்போது, ‘கடந்த சட்டசபை தேர்தலில், நீ ஏன் த.வெ.க.,விற்கு ஓட்டு போட்டாய்,’ என கேட்டார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமரன், ஆபாசமாக திட்டி, அருகில் கிடந்த கட்டையை எடுத்து ராஜவேலை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து ராஜவேல் கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து
முத்துக்குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
