/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண் செக்கியூரிட்டியை மிரட்டிய வாலிபர் கைது
/
பெண் செக்கியூரிட்டியை மிரட்டிய வாலிபர் கைது
ADDED : ஆக 29, 2024 07:34 AM
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில் உறவினரை பார்க்க அனுமதிக்க மறுத்த பெண் செக்கியூரிட்டியை மிரட்டிய வாலிபரை கடலுார் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் வில்வநகரை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி ஆர்த்தி 37; இவர் கடலுார் அரசு மருத்துவமனையில் பெண்கள் பிரசவ வார்ட்டில் செக்கியூரிட்டியாக உள்ளார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் மேலபுதுப்பேட்டையைச் சேர்ந்த குமார் மகன் தங்கமணி 28; கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்க்க சென்றார். அப்போது செக்கியூரிட்டி ஆர்த்தி, உள்ளே செல்ல கூடாது என அனுமதிக்க மறுத்தார்.
இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தங்கமணி, செக்கியூரிட்டி ஆர்த்தியை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ஆர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, தங்கமணியை கைது செய்தனர்.