/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்டர் மீடியனில் ஜீப்ரா பெயிண்ட்
/
சென்டர் மீடியனில் ஜீப்ரா பெயிண்ட்
ADDED : மே 27, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் - புதுச்சேரி பிரதான சாலையில் சென்டர் மீடியனில் ஜீப்ரா பெயிண்ட் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடலுார் - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் கடலுார் மாவட்ட எல்லை பகுதியான ரெட்டிச்சாவடியில் விபத்தை தடுக்கும் வகையில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சென்டர் மீடியன்களில் ஜீப்ரா பெயிண்ட் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை இருந்தது.
இதை தடுக்கும் வகையில் சென்டர் மீடியனில் ஜீப்ரா பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

