/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயிலில் 10 கிலோ கஞ்சா சிதம்பரத்தில் பறிமுதல்
/
ரயிலில் 10 கிலோ கஞ்சா சிதம்பரத்தில் பறிமுதல்
ADDED : ஏப் 26, 2025 09:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த10 கிலோ கஞ்சாவை இருப்பு பாதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சரளாபட்டியில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரயில் நேற்று சிதம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அங்கு, சிதம்பரம் இருப்பு பாதை காவல் நிலைய போலீசார், ரயில் பெட்டியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கேட்பாரற்று கிடந்த நீல நிற சாக்கு பையை சோதனை செய்த போது, 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. இதுகுறித்து போதை ஒழிப்புத்துறை தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

