ADDED : டிச 28, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம்: கடலுார் அருகே இரு கார்கள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், பலி எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்தது.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மாவட்டம், ராமநத்தம் அருகே, 24ம் தேதி, மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு விரைவு பஸ்சின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
மீடியனை தாண்டி, எதிர் திசையில் சாலையில் தாறுமாறாக ஓடிய பஸ், திருச்சி நோக்கி சென்ற இரு கார்கள் மீது மோதியதில், காரில் பயணித்த 9 பேர் இறந்த நிலையில், நான்கு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில், புதுக்கோட்டை மாவட்டம், பிள்ளை தண்ணீர் பந்தலை சேர்ந்த சிராஜூதின் மகன் அப்துல் அகத், 6, நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ராமநத்தம் போலீசார் விசாரிக் கின்றனர்.

