/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை கோவிலுக்கு ரூ.10 லட்சத்தில் தேர் சீலை
/
விருதை கோவிலுக்கு ரூ.10 லட்சத்தில் தேர் சீலை
ADDED : பிப் 17, 2024 11:49 PM

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் தேருக்கு, ரூ. 10 லட்சத்தில் தேர் சீலைகளை, இன்பேண்ட் பள்ளி நிர்வாகி வழங்கினார்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்வாக, வரும் 23ம் தேதி தேரோட்டத்தில் ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் உலா வருவது வழக்கம்.
இந்நிலையில், தேர்களை அலங்கரித்து ரம்மியமாக காட்சி தரும் தேர் சீலைகள் பழுதடைந்தன. இதனால், விருத்தாசலம் பெரியார் நகர் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் ஐந்து தேர்களுக்கும் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக தேர் சீலைகள் வழங்கப்பட்டன.
கோவில் செயல் அலுவலர் மாலா முன்னிலையில் பள்ளி தாளாளர் விஜயகுமாரி வழங்கினார். கோவில் ஊழியர்கள், சிவாச்சாரியார்கள், பக்தர்கள் உடனிருந்தனர்.