/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் நிறுவன வேலை வாய்ப்பு பள்ளி மாணவர்கள் 10 பேர் தேர்வு
/
தனியார் நிறுவன வேலை வாய்ப்பு பள்ளி மாணவர்கள் 10 பேர் தேர்வு
தனியார் நிறுவன வேலை வாய்ப்பு பள்ளி மாணவர்கள் 10 பேர் தேர்வு
தனியார் நிறுவன வேலை வாய்ப்பு பள்ளி மாணவர்கள் 10 பேர் தேர்வு
ADDED : பிப் 18, 2024 12:15 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு நேர்க்காணலில் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கோயமுத்துார் டைட்டான் ப்ரொடக்ஷன் டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனம் வேலை வாய்ப்பு நேர்க்காணல் நடத்தியது. இதில், 10 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
இவர்களுக்கு, பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் முடிந்தவுடன், நிரந்தர வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
அதற்கான, பணி நியமன ஆணையை, தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியன் வழங்கினார். தனியார் நிறுவன மேலாளர் ராஜ்குமார் உடனிருந்தார்.
ஏற்பாடுகளை, தொழிற்கல்வி ஆசிரியர் உதயக்குமார் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுநர் மணிகண்டன் செய்திருந்தனர்.