ADDED : ஜூலை 29, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : எடையூர் கிராம மக்கள், 100 நாள் வேலை முறையாக வழங்கக் கோரி மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், நல்லுார் ஒன்றியம், எடையூர் கிராம மக்கள் அளித்த மனு:
எடையூர் கிராமத்தில் 100 நாள் வேலை கடந்த சில தினங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. அதில் சிலர் போலியான அடையாள அட்டை வைத்து வேலை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, எடையூர் ஊராட்சியில் ஆய்வு செய்து போலி மாற்றுத்திறனாளிகளை களை எடுக்கவும், பொது மக்களுக்கு முறையாக 100 நாள் வேலை வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.