/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் மீண்டும் 100 டிகிரி வெயில்
/
மாவட்டத்தில் மீண்டும் 100 டிகிரி வெயில்
ADDED : மே 17, 2025 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்றும் வெயில் சதமடித்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
தமிழகத்தில் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இந்த காலத்தில்தான் வெப்பம் அதிகளவில் தாக்கும்.
நேற்று காலை வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நேரம் செல்ல செல்ல வெப்ப அலை வீசியது.
கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்றும் 100 டிகிரி வெப்பம் பதிவானது.
அதன் காரணமாக சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்தது. புழுக்கத்தினால் வயதானவர்கள், குழந்தைகள் அவதியடைந்தனர்.