/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சியில் 100 சதவீத வரி வசூல்; செயலர்களுக்கு அறிவுறுத்தல்
/
ஊராட்சியில் 100 சதவீத வரி வசூல்; செயலர்களுக்கு அறிவுறுத்தல்
ஊராட்சியில் 100 சதவீத வரி வசூல்; செயலர்களுக்கு அறிவுறுத்தல்
ஊராட்சியில் 100 சதவீத வரி வசூல்; செயலர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 15, 2025 08:57 PM
மந்தாரக்குப்பம்; கம்மாபுரம் ஒன்றிய ஊராட்சிகளில்இம்மாத இறுதிக்குள் 100 சதவீதம் வரி வசூலிக்க வேண் டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட 43 ஊராட்சிகளில் இம்மாத இறுதிக்குள் ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில்வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வரியினங்கள் வாயிலாக வரும் வருமானம் ஊராட்சிகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுக்கிறது. எனவே இம்மாத இறுதிக்குள் தீவிரமாக வசூலிக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டும் எனவும், ஒலிபெருக்கி வாயிலாக வரியினங்களை செலுத்த, வாகன பிரசாரம் மேற்கொள்வது.
வரியினங்களை உரிய நேரத்தில் செலுத்த வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.