/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் மீண்டும் 101.1 டிகிரி வெயில்
/
மாவட்டத்தில் மீண்டும் 101.1 டிகிரி வெயில்
ADDED : ஜூன் 02, 2025 12:12 AM
கடலுார்:கடலுார் மாவட்டத்தில் நேற்று வெயில் சதமடித்ததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
தமிழகத்தில் கத்தரி வெயில் மே 4ம் தேதி துவங்கி கடந்த 28ம் தேதி முடிவடைந்தது. கத்திரி வெயின் போது, வழக்கத்தை விட கூடுதல் வெப்ப அலை தாக்கும். இந்தாண்டு கத்திரி வெயிலின் போது தொடர் மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
இந்நிலையில் வங்கக் கடலில் தென்மேற்கே தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்தது. தொடர்ந்து வானம் மேக கூட்டமாக காணப்பட்டது. நேற்று காலை வானத்தில் மேகக் கூட்டம் இல்லை. இதனால் வெயில் கடுமையாக வீசியது. மாவட்டத்தில் 101.1 டிகிரி வெப்பம் பதிவானது. மதியம் திடீரென மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.