/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரணை இறந்து கிடந்த உணவு சாப்பிட்ட 103 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
/
அரணை இறந்து கிடந்த உணவு சாப்பிட்ட 103 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
அரணை இறந்து கிடந்த உணவு சாப்பிட்ட 103 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
அரணை இறந்து கிடந்த உணவு சாப்பிட்ட 103 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
ADDED : பிப் 13, 2024 04:41 AM

சேத்தியாத்தோப்பு,: அரசு பள்ளியில், அரணை இறந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட 103 மாணவ, மாணவிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த சாக்காங்குடியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 222 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் நேற்று மதியம் வழங்கிய உணவை, மாணவ, மாணவிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, 10ம் வகுப்பு மாணவி கிேஷானாவின் தட்டில் இருந்த சாப்பாட்டில், அரணை (பல்லி வகை) இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனைக் கண்ட சக மாணவ, மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடன் பள்ளி ஆசிரியர்கள், போலீஸ் மற்றம் 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்த 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை வரவழைத்து , பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை அரசு மருத்துவமனைகளுக்கு உடனுக்குடன் அனுப்பி வைத்தனர்.
அவர்களில் 35 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், 40 பேர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும், 28 பேர் புவனகிரி அரசு மருத்துவக்கல்லுாரி என மொத்தம் 103 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
சப் கலெக்டர் ராஸ்மிராணி உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைகளில் முகாமிட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கண்காணித்துதொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உணவில் அரணை விழுந்தது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல்
பள்ளியில் மாணவர்கள் மயங்கி விழுந்த தகவலறிந்த பெற்றோர், உறவினர்களுடன் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அலட்சியமாக நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, மாலை 3:30 மணியளவில் சாக்காங்குடி பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சேத்தியாத்தோப்பு போலீசார் சமாதானப்படுத்தினர்.