/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
/
பாடலீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED : நவ 18, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக காலை கலச பூஜை, 108 சங்கு பூஜை நடந்தது .
பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு விசேஷ திரவியங்களால் அபிஷேகம், ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. பின், பாடலீஸ்வரருக்கு கலச அபிஷேகம் மற்றும் 108 சங்கு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பெரியநாயகிக்கும் கலச அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இரவு மகா தீபாராதனை நடந்தது.

