/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் 11 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
/
விருத்தாசலத்தில் 11 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ADDED : மார் 05, 2024 06:00 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 11 கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் நகராட்சி காய்கறி மார்க்கெட்டில் உள்ள எம்., பிளாக்கில் 8 கடைகளுக்கு 37 லட்சத்து 29 ஆயிரத்து 229 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது.
அங்கிருந்த உரிமையாளர்கள் கடைகள் வேண்டாம் என நகராட்சியிடம் ஒப்படைத்து விட்டனர். ஆனால், 8 கடைகளையும் தனிநபர் சிலர் ஆக்கிரமித்து, காய்கறிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தனர்.
தகவலறிந்த நகராட்சி பொறியாளர் ரவீந்திரன், மேலாளர் கனிமொழி, வருவாய் ஆய்வாளர் ஷகிலா பானு, துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், ரவிச்சந்திரன், வேல்முருகன், ஆறுமுகம் உள்ளிட்டோர் சென்று, கடைகளின் சிமென்ட் ஷீட்டுகள், தடுப்புகளை அப்புறப்படுத்தினர். அப்போது, கடைகளை ஆக்கிரமித்திருந்த நபர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதேபோல், ஜே., பிளாக்கில் 3 கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட உள்ளதால், அதனை ஆக்கிரமித்திருந்த மூன்று கடைகளின் உரிமையாளர்களையும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
அங்கிருந்த பொருட்களை வெளியே எடுத்ததும், மூன்று கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி வைத்துள்ள நபர்கள், உடனடியாக செலுத்துமாறு அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால், காய்கறி மார்க்கெட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

