/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் தாலுகாவில் தொடர் மழையால் 11 வீடுகள் சேதம்
/
விருத்தாசலம் தாலுகாவில் தொடர் மழையால் 11 வீடுகள் சேதம்
விருத்தாசலம் தாலுகாவில் தொடர் மழையால் 11 வீடுகள் சேதம்
விருத்தாசலம் தாலுகாவில் தொடர் மழையால் 11 வீடுகள் சேதம்
ADDED : அக் 23, 2025 01:02 AM
விருத்தாசலம்: தொடர் மழையின் காரணமாக, விருத்தாசலம் தாலுகாவில் 11 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப் பட்டிருந்தது.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, சேப்ளாநத்தம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலை, சுப்ரமணியன், சரோஜா, சகுந்தலா, கோட்டேரி கிராமத்தை சேர்ந்த பவுல்ராஜ், முதனை பச்சையம்மாள், கொலத்தங்ககுறிச்சி நடராஜன், குப்பநத்தம் வளர்மதி, கார்குடல் பாஸ்கர், சின்னாத்துக்குறிச்சி தனுசுவேல், மணிகண்டன் ஆகிய 11 பேரின் கூரை மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.
இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.