/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பாதுகாப்பு முகாம்கள் தயார்: அமைச்சர் கணேசன்
/
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பாதுகாப்பு முகாம்கள் தயார்: அமைச்சர் கணேசன்
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பாதுகாப்பு முகாம்கள் தயார்: அமைச்சர் கணேசன்
பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க பாதுகாப்பு முகாம்கள் தயார்: அமைச்சர் கணேசன்
ADDED : அக் 23, 2025 01:02 AM

கடலுார்: பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக 233 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப்பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ., ஐயப்பன் மு ன்னிலை வகித்தனர்.
கடலுார் மாவட்டத்தில் கனமழை ஏற்பட நேரிடும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் மீட்பு பணிகள் மேற்கொள்வது மற்றும் தடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட் டது. நேற்று பெய்த கனமழையினால் கடலுாரில் 17.9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக 233 பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் வை க்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கரையோர பகுதிகள் மிகுந்த சேதம் ஏற்பட்டது. இவற்றில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்ட 23 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் நீர்வள
ஆதாரத்துறையின் மூலம் கரைகள் பலப்படுத்த 54 கோடி ரூபாய் மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.
மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் வசதிகள், மின்சாரம் இல்லாத போது உபயோகிக்க ஏதுவாக பேட்டரிகள் மற்றும் டீசல் தயார் நிலையில் வைத்திருக்கவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் மருந்து பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் ஏற்படும் இடர்களிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட மாநில பேரிடர் குழு காவலர்களும், நீச்சல் வீரர்களும். பாம்பு பிடிப்பவர்களும் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
நெய்வேலி செம்மேடு, எலந்தம்பட்டு, சிறுவத்துார் ஆகிய பகுதிகளில் கெடிலம் ஆற்றின் குறுக்கே 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்பு பணிகளும், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவாமூர் பகுதியில் தெற்கு மலட்டாற்றில் தடுப்பணை சீரமைப்பு
மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளும், கெடிலம் ஆற்றின் குறுக்கே காமாட்சிப்பேட்டை கிராமத்தில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை பணிகளும் நடந்து வருகிறது.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் பேரிடர் தொடர்பான புகார்களை தெரிவிக்கவும், உதவி தேவைப்படின் 1077 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொள்ளலாம், என அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார், துணைமேயர் தாமரைச்செல்வன், வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, சப் கலெக்டர் கிஷன்குமார், பயிற்சி கலெக்டர் மாலதி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.