/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு
/
கடலுார் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு
ADDED : நவ 11, 2024 04:16 AM
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் 11 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தால், தற்போது காய்ச்சல், சளி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
இந்நிலையில், கடலுார் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இதில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 78 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சோதனை செய்யப்பட்டது.
இதில் 5 ஆண்கள், 6 பெண்கள் என 11 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 11 பேரும் கடலுார் அரசு மருத்துவமனையில் உள்ள டெங்கு காய்ச்சல் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 26 ஆண்கள், 41 பெண்கள் என 67 பேருக்கு வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.