/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அகில இந்திய மல்யுத்த போட்டி கடலுார் மாணவர்கள் 11 பேர் தேர்வு
/
அகில இந்திய மல்யுத்த போட்டி கடலுார் மாணவர்கள் 11 பேர் தேர்வு
அகில இந்திய மல்யுத்த போட்டி கடலுார் மாணவர்கள் 11 பேர் தேர்வு
அகில இந்திய மல்யுத்த போட்டி கடலுார் மாணவர்கள் 11 பேர் தேர்வு
ADDED : டிச 25, 2025 06:03 AM

கடலுார்: பஞ்சாபில் நடக்கும் அகில இந்திய பல்கலைகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டியில் பங்கேற்க, கடலுார் மாணவர்கள் 11 தேர்வு செய்யப்பட்டனர்.
அகில இந்திய பல்கலைகளுக்கு இடையே மல்யுத்த போட்டி பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் வரும் ஜன., 5ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கு, உட்பட்ட கல்லுாரி வீரர்கள் தேர்வு, கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.
இதில் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட, 4 மாவட்டங்களில் இருந்து 8 கல்லுாரிகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் பேர் பங்கேற்றனர்.
இதில், 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கடலுார் அரசு பெரியார் கல்லுாரி மாணவர்கள் ராஜா, விக்னேஷ், சாய் லக்ஷன், பாலாஜி ஆகியோர் பிரி ஸ்டைல் பிரிவிலும், அபினேஷ், ஆகாஷ், சந்தீப்குமார், மாதேஷ் ஆதவன் ஆகியோர் பிரிக்கோ ரோமன் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டனர்.
கடலுார் செயின்ட் ஜோசப் கல்லுாரி மாணவர்கள் ஹரிகணேஷ், ககன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர் சுரேஷ் தேர்வாகினர்.
இவர்களுக்கு கடலுார் அரசு பெரியார் கல்லுாரியில் அண்ணா விளையாட்டரங்க மல்யுத்த பயிற்சியாளர் மெய்யநாதன், காவலர் ராஜேஷ் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

